By Unknown On செவ்வாய், அக்டோபர் 25, 2016 | Categorized As , | With 1 comments
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதி நகரான குவெட்டா நகருக்கு வெளியே அமைந்திருந்துள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த சுமார் 60 பொலிஸ் படை பயிற்சி பெறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பயிற்சியர் தங்கியிருந்த இந்த பொலிஸ் பயிற்சி நிலையத்தின், விடுதியின் உள்ளே நுழைந்த 5 அல்லது 6 பேர் அடங்கிய தாக்குதல்தாரிகள் அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைத்த அரச பாதுகாப்பு பிரிவினர் மூன்று துப்பாக்கிதாரிகளை சுட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த தாக்குதல்தாரிகள் இயக்கப்பட்டு இருக்கலாம் என்று தான் நம்புவுதாக, ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (ம|ஸ)

About admin - Share a little biographical information to fill out your profile. This may be shown publicly. Share a little biographical information to fill out your profile. This may be shown publicly.

Displaying 1 comments:
Have Your Say

கருத்துரையிடுக